ETV Bharat / state

நிபா வைரஸ் பரவல்..! தேனி, போடி மெட்டு பகுதியில் சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனை! - nipha virus inspection in theni

nipah virus: தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க தேனி அருகே போடி மெட்டு பகுதியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்

தேனி, போடி மெட்டு பகுதியில் சுகாதாரத் துறையினர் திவிர பரிசோதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 2:31 PM IST

தேனி, போடி மெட்டு பகுதியில் சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்

தேனி: தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக-கேரளா மாநில எல்லையான தேனி மாவட்ட போடி மெட்டு பகுதியில் சுகாதாரத் துறையினர், மருத்துவக் குழு அமைத்து பரிசோதித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக இரண்டு நபர்கள் பலியான நிலையில் சுமார் 757 நபர்களுக்கு நிபா வைரஸ் கிருமி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 77 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேரளா அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலை கிராமத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உணவு அருந்தியும், பொருட்கள் வாங்கியும் செல்கின்றனர்.

இதையும் படிங்க: ‘என் மீது பாலியல் புகார் கொடுத்த மனுதாரர்கள் ஒரே நேரத்தில் ஆஜராக வேண்டும்’ - சீமான் தரப்பில் புகார் மனு!

அதிக மக்கள் கூடும் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிக அளவு உள்ளதால், சுகாதாரத் துறையினர் போடி மெட்டு எல்லைப் பகுதியில் வாகன ஆய்வுகளை தீவிர படுத்த வேண்டும் என்று போடி மெட்டு மலைவாழ் கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழக-கேரள எல்லை பகுதியான போடி மெட்டு மலை கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பாக, கேரளா மூணாறில் இருந்து வரும் பேருந்துகள், காய்கறி வண்டிகள், சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், போடி மெட்டு கேரளா எல்லைப் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைப்பகுதிகளில் குளோரின் பவுடர் தூவப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போடிநாயக்கனூரில் இருந்து போடி மெட்டு செல்லும் மலைப்பாதை அருகில் அமைந்துள்ள கிராமத்தில், உள்ள சோதனை சாவடி அருகே, உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூன்றாவது நாளாக தொடர்ந்து சுகாதாரத் துறையினர் கேரளா இடுக்கி மாவட்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்களைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஈபிஎஸ் பினாமி உள்ளிட்டோரின் பெயர்களையும் கூறியுள்ளேன்” - கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.