தேனி மாவட்டம் கீழ சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(25). இவர் பெங்களூரில் தனியார் கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.12) தனது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினர் அவரது நண்பர் பிரபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பெண் ஒருவரிடம் பிரபு பழகி வந்துள்ளார். அதே பெண்ணுடன் ரவிக்குமாரும் பழக முயன்றார். இதனால் எற்பட்ட தகராறில் ரவிக்குமாரை பிரபு கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபுவை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரண்!