ETV Bharat / state

மது அருந்த பசு மாடுகளை திருடி விற்பனை செய்த நான்கு பேர் கைது!

தேனி: பெரியகுளம் அருகே மது குடிக்க பணம் தேவைப்பட்டதால், விவசாய தோட்டத்தில் பசு மாடுகளை திருடி விற்பனை செய்த நான்கு பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

four-arrested-for-selling-theft-cows
four-arrested-for-selling-theft-cows
author img

By

Published : May 22, 2020, 9:50 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேஷ். இவர் தனது தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இதில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு இரண்டு பசுமாடுகள் காணாமல் போனதாக காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து, விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி, சிவப்பிரகாசம் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுகுடிக்க பணம் இல்லாத காரணத்தால் பசுமாடுகளை திருடி, ஆண்டிப்பட்டியில் விற்பனை செய்தது தெரியவந்தது.

மது அருந்த பசு மாடுகளை திருடி விற்பனை செய்த நான்கு பேர் கைது

தொடர்ந்து, மாட்டை விற்பதற்கு துணையாக இருந்த ஆண்டிபட்டியைச் சேர்ந்த பார்த்திபன், சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பசுமாடுகளை மீட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வடகரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மதுப்பாட்டில்களை பறித்த காவலர்கள் - புகாரளித்த மதுப் பிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.