ETV Bharat / state

Arikomban Elephant: பொதுமக்களால் அரிக்கொம்பன் அச்சம் - அமைச்சர் மதிவேந்தன்

பொதுமக்களால் ஏற்படும் இடையூறுகளின் காரணமாக அரிகொம்பன் யானை அச்சமடைந்துள்ளதாகவும், தன்னை பாதுகாத்து கொள்ளவே யானை சில சேதங்களை ஏற்படுத்தியதாகவும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் அரிக்கொம்பன் யானை அச்சம் என அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

author img

By

Published : May 29, 2023, 12:13 PM IST

அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்கள் சந்திப்பு

தேனி: கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிகொம்பன் யானையை வனத்துறையினர் கடந்த கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.

பின்னர், கடந்த இரண்டு தினங்களாக குமுளி ரோஜாப்பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்தது. பின் யானை கூடலூர் அருகே உள்ள கழுதை மேட்டில் இருந்து இடம் பெயர்ந்து கூடலூர் வழியாக கம்பம் பகுதியை வந்தடைந்தது. மக்கள்தொகை அதிகம் கொண்ட கம்பம் பகுதியில் அரிகொம்பன் காட்டு யானை புகுந்ததை கண்டு கம்பம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர்.

நேற்று (28/5/23) அதிகாலை யானை கம்பத்திலிருந்து இடம் பெயர்ந்து சுருளிப்பட்டி அருகே உள்ள யானை கஜம் பகுதிக்கு சென்றது. மேலும் அந்தப் பகுதியில் ஒரு சில விளைநிலங்களை அரிகொம்பன் யானை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யானையை சுருளிப்பட்டி கிராம பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கும் அரிகொம்பன் யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக சிறப்பு நிபுணர் வரவழைக்கப்பட்டனர்.

அதிகாலை கோவை மாவட்டம், ஆனைமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானையையும் கம்பம் நகர் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் அரிசி ராஜா மற்றும் உதயன் என்ற இரண்டு கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு கம்பம் புறவழிச்சாலை தனியார் மண்டபத்திற்கு அருகே உள்ள புளியந்தோப்பில் யானைகளை வனத்துறையினர் வைத்துள்ளனர்.

யானையை பிடிக்க துறையினர் மேற்கொள்ள நடவடிக்கைகளை கண்காணிக்கவும், யானையால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்கவும், அரிகொம்பன் யானையை பத்திரமாக பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்யவும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வருகை புரிந்தார்.

கம்பம் சுருளிப்பட்டியில் அரிகொம்பன் யானை சென்ற இடத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தேனி மாவட்ட ஆட்சியர், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த ஆய்வின் முடிவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களின் சந்திப்பில், "அரிகொம்பன் என்ற அரிசிக்கொம்பன் என்னும் யானை கிட்டதட்ட 35 வயது மிக்க ஆண் யானை. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கேளா மாநில வனத்துறையினரால் பிடிப்பட்டு, முல்லைக் கொடி பகுதிக்குட்பட்ட பெரியார் புலிகள் வனப்பகுதியில் கடந்த மாதம் 29.04.2023 அன்று விடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதியான தேனி மாவட்டம், மேலக்கூடலூர் கிராமப்பகுதிக்கு கடந்த 30.04.2023 அன்று வந்துள்ளது. மேலும், ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக்கும் யானை வருகை தந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம், குமுளி சுரங்கணாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு விளை நிலப்பகுதியில், 27.05.2023 அன்று சுமார் மாலை 4.00 மணி அளவில் யானை காணப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு சில நபர்களால் யானைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கெஞ்சிகவுண்டன் குளம் மின்சார வாரியம் துணை நிலையத்திற்கு அருகில் யானை இருப்பதை கண்டறிந்த வனத்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்கள் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, ட்ரோன் கேமிரா மூலம் ஒரு நபர் ஒளிப்பதிவு செய்ததன் மூலம் யானைக்கு இடையூறு ஏற்பட்டு, காந்தி நகரில் இருக்க கூடிய கம்பம் - குமுளி புறவழிச்சாலை வாழை தோட்டத்தில் தங்கியுள்ளது.

ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட இடையூறுகளால் யானை பயத்திற்குட்பட்டு ஒவ்வொரு இடத்திலிருந்தும் மாறி, மாறி பயணம் செய்து வந்துள்ளது. மேலும், எதிர்பாரத விதமாக கம்பம் நகர்பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நகர்ப் பகுதியிலிருந்து யானை வெளியேற்றப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கு பல்வேறு குழுக்கள் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து, திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது யானையினால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் மற்றும் யானையை பாதுகாத்திடும் பொருட்டு ஒரு அமைதியான நிலையை உருவாக்கி யானையை பிடிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

யானையை பிடிப்பதற்கு பல்வேறு குழுக்கள் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், குறிப்பாக வனத்துறைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் யானையை பிடிப்பது அல்லது வனப்பகுதியில் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். தற்போது யானை, கூத்தநாட்சி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வானொலி கழுத்துப்பட்டை கருவி யானைக்கு பொருத்தப்பட்டு யானை எங்கே இருக்கிறது என்பதனை ரேடியோ ரிசீவர் மூலம் யானை எங்கு இருக்கிறது? எங்கு செல்கிறது? என்பதனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை எப்போது கேளா மாநிலத்திலிருந்து பெரியார் புலிகள் வனப்பகுதியில் எப்போது விடப்பட்டதோ அப்போதிலிருந்தே தொடர்ந்து நமது தமிழ்நாடு வனத்துறையினரால் யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில இடங்களில் குறிப்பாக நகர் பகுதிக்குள் யானை வருகின்ற போது தகவல்கள் சரிவர கிடைக்காது. மீதமுள்ள இடங்களில் யானை எங்கு செல்கின்றது என்பது போன்ற தகவல் தொடர்ந்து கிடைத்தும். பொதுமக்களால் ஏற்படும் இடையூறுகளின் காரணமாக யானை அச்சம் கொண்டு தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டி சிலவற்றை சேதபடுத்துகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.

இதனால் யானையை அமைதிப்படுத்தி பிடிப்பதற்கான சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. பிரகாஷ் என்பவர் தலைமையில் மருத்துவக் குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு, யானையை பிடிக்க கூடிய ஒரு சூழலில் டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி, யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது.

மேலும், மூன்று கும்கி யானைகள் யானையை பிடிப்பதற்கு வரவழைக்கப்பட்டு, தற்போது இரண்டு கும்கி யானைகள் வருகை தந்துள்ளது. இன்னொரு யானையும் வந்து கொண்டிருக்கிறது. டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி யானையை மயக்க நிலையில் பிடித்தாலும் கும்கி யானைகளை பயன்படுத்தி அதனை வாகனத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யானையினை பிடிப்பது மிகவும் சவலான விஷயம் ஆகையினால் யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் நகர்ப்பகுதிக்குள் யானை நுழையாத வண்ணம் மருத்துவக்குழு, வனத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள், சிறப்பு யானை கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

மேலும், மக்களிடமிருந்து யானைக்கோ, யானையிடமிருந்து மக்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இரவு பகலாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன் தினம் கூட யானை, சந்தைப் பகுதிக்குச் செல்லக்ககூடிய சுழ்நிலை ஏற்பட்டது. ஆனால் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு யானையினை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 144 தடை உத்தரவு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கு பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்" என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: நீலகிரியில் நாய்கள் கண்காட்சி: 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்ற க்யூட் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.