ETV Bharat / state

மலை மாடுகள் மேய்க்கும் விவசாயிகளுடன் வனத் துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி! - theni district news

மலை மாடுகள் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும் நாட்டு மாடுகளுக்கு வனத் துறை சார்பில் இலவச அனுமதிச் சீட்டு வழங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாடு மேய்க்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

forest department and farmer negotiation failed in theni
மலை மாடுகள் மேய்க்கும் விவசாயிகளுடன் வனத்துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
author img

By

Published : Nov 4, 2020, 8:43 PM IST

தேனி: தேனி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும் நாட்டு மாடுகளுக்கு வனத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு அனுமதிச்சீட்டு வழங்குவதில் வனத் துறையினர் காலதமாதப்படுத்துவதாக மலை மாடு விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், வனத் துறையைக் கண்டித்து அச்சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், மலை மாடுகள் விவசாயிகள் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் அழைத்தது.

அதனையேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலை மாடு மேய்க்கும் விவசாயிகள் குவிந்தனர். பேச்சுவார்த்தை கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தலைமையில் மலை மாடு மேய்க்கும் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளும், அரசுத் தரப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் துக்காராம் போஸ்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மலை மாடுகள் மேய்க்கும் விவசாயிகள் போராட்டம்

மலை மாடுகளுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாய சங்க நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த வனத் துறையினர், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதால், அனுமதி வழங்க இயலாது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை இடத்தொடங்கினர்.

forest department and farmer negotiation failed in theni
ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாடு மேய்க்கும் விவசாயிகள்

பின்னர் விவசாய சங்க நிர்வாகிகளைச் சமாதனம் செய்ததைத் தொடர்ந்து மலை மாடுகள் மேய்க்கும் விவசாயிகள் கலைந்துசென்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம், "மலை மாடுகளுக்கு இலவச மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்ற பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இதனை மாவட்ட நிரவாகம், விவசாய சங்கங்கள் சார்பில் விரைந்து முடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுவரையில் மலைகளில் மாடுகளை மேய்ப்போம் என அலுவலர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டோம்.

இதனால் ஏற்படக்கூடிய எந்தப்பிரச்னையையும் சந்திக்கத் தயாராகவுள்ளோம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறினர்" என்றார்.

இதையும் படிங்க: அனுமதிச் சீட்டு இருந்தும் அனுமதி மறுப்பு - மேய்ச்சலின்றி சாகும் மலை மாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.