தேனி: தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2,274 கனஅடியாக உள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக உள்ளது.
அணையின் மொத்த உயரம் 152 அடி. அணையில் நீர் இருப்பு 6,181 மில்லியன் கனஅடியாக இருந்தது. இந்நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 511 கன அடியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியதால் அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் கேரளப் பகுதி மக்களுக்கு தமிழ்நாடு பொதுப்பணி துறையின் சார்பில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!