ETV Bharat / state

தேனியில் தீப்பற்றி எரிந்த கார்... காவல்துறை விசாரணை - Theni five star hotel

தேனியில் தனியார் நட்சத்திர ஹோட்டல் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பற்றிய தீ

author img

By

Published : Oct 27, 2022, 7:18 AM IST

தேனி: பழனிசெட்டிபட்டியில் தனியார் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் சிவகாசி மேட்டுப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது தனது காரை ஹோட்டலின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து புகை வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணன் வருவதற்குள், கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

தனியார் நட்சத்திர ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பற்றிய தீ

காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அருணாசலப் பிரதேசத்தில் தீ விபத்து, 700 கடைகள் நாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.