ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தந்தை தீ குளிக்க முயற்சி

தேனி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தந்தை தீ குளிக்க முயன்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகளுடன் தந்தை தீ குளிக்க முயற்சி
குழந்தைகளுடன் தந்தை தீ குளிக்க முயற்சி
author img

By

Published : Sep 29, 2020, 8:44 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது இரண்டு மகள்கள், 10 வயது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்ணெண்ணய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உடனே அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். முதல்கட்ட விசாரணையில், "ராமுவின் மகனான 10 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (50) என்பவர் ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். இது சம்பந்தமாக இராஜதானி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செல்லப்பாண்டி அவரது தந்தை ஆகியோர் ராமு குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். மேலும், காவல் துறையினர் அடிக்கடி விசாரணைக்கு அழைப்பதால் ராமு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்" என்பது தொரியவந்தது.

தற்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ராமுவிடம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் சிறுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.