ETV Bharat / state

ஜி9 ரக வாழையின் விளைச்சலோ அதிகம், விலையோ குறைவு!

தேனி மாவட்டத்தில் உள்ள ஏராளமான வாழை விவசாயிகள் பயிரிட்டுள்ள ஜி9 ரக வாழை, இந்த ஆண்டு நல்ல விளைச்சலை அடைந்திருந்தாலும் போதிய அளவிற்கான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

G9 variety banana
G9 variety banana
author img

By

Published : Jul 16, 2023, 4:38 PM IST

ஜி9 ரக வாழையின் விளைச்சலோ அதிகம், விலையோ குறைவு!

தேனி: தேனி மாவட்டத்தில், பத்தாயிரம் ஏக்கருக்கும் மேல் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் ஜி9 ரக வாழையைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், சின்னமனூர் மற்றும் சீப்பாலக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் ஜி9 ரக வாழை, பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகி வருகிறது.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக, நாழிப்பூவன், நேந்திரம், செவ்வாழை, ஜி9 ரக பச்சை வாழை ரகங்களையும் பெருமளவில் விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர். தேனி மாவட்டத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் ஜி9 ரக பச்சை வாழை, வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் துபாய், ஈரான் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மற்ற ரக வாழைப்பழங்கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படுவதால் தேனி மாவட்டத்தில் ஜி9 ரக வாழைப்பழங்களைப் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜி9 ரக வாழை தற்போது சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மகசூலைக் கண்டுள்ளது.

சரியான தட்பவெப்பநிலையும் பருவமழையும் கை கொடுத்ததால் ஜி9 ரக வாழை நல்ல விளைச்சலைக் கண்டுள்ளதாக சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். ஜி9 ரக வாழை நல்ல விளைச்சலைக் கண்டிருந்தாலும் வெளிச்சந்தைகளில் வாழையின் விலை குறைந்தே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இது குறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், "இதே பகுதியில் திசு வாழை ரக ஜி9 வாழை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயிர் செய்து வருகிறோம். ஜி9 ரக வாழை எப்பொழுதும் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தான் ஏற்றுமதியாகும். இந்த ஆண்டு மகசூல் எதிர்பார்த்த அளவைக்காட்டிலும் நன்றாகவே உள்ளது. ஆனாலும் விலை இல்லாமல் குறைந்த அளவு விலையிலேயே விற்பனையாகிறது.

தற்போது கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆனால், 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விற்பனையானால்தான் விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கும். இருந்தபோதிலும் தற்போது வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி நடைபெறுவதால் வாழை தேக்கமடையாமல் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.