தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(42). இவர் புதிய தமிழகம் கட்சியின் தேனி மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகின்றார்.
இந்நிலையில், தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் பத்மசுருதி ஆகியோருடன் சின்னமனூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், மார்க்கையன் கோட்டை பெட்ரோல் பங்க் அருகே நாட்டு வெடியை பாலமுருகன் மீது எறிந்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதில், பாலமுருகனின் வலது கால் பாதத்தில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்த அவருக்கு, உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 324 (ஆபத்தான ஆயுதங்கள் மூலம் காயம் ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடவு பணிக்காக வைத்திருந்த சின்ன வெங்காயம் திருட்டு!