ETV Bharat / state

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் அசத்திய கல்லூரி மாணவர்கள்! - கல்லூரி விளையாட்டு விழா

தேனி: உத்தமபாளையத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளுடன் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழாவில் ஆர்வமுடன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

exciting-college-gentlemen-in-traditional-sports-competitions
exciting-college-gentlemen-in-traditional-sports-competitions
author img

By

Published : Feb 10, 2020, 10:02 AM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியை கல்லூரி தாளாளர் தர்வேஸ்மைதீன் புறாக்களை பறக்கவிட்டு துவக்கி வைத்தார்.

விழாவில் மாணவ - மாணவியருக்கு பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் போன்ற தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் நவீனமாகி வரும் சூழலில் கிராமப்புற விளையாட்டுகளான ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், பச்சை குதிரை தாண்டுதல், பல்லாங்குழி, பாண்டி ஆட்டம், சொட்டாங்கல் ஆட்டம், போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இளைய சமுதாயத்தினர் மத்தியில் குறைந்து வருகிறது. இவ்வகை போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இவ்விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதன் மூலமாக தமிழ்நாடு கிராமப்புற விளையாட்டுகள் தொடர்ந்து இனிவரும் காலங்களில் மாணவர் மத்தியிலும், இளைய சமுதாயத்தினர் மத்தியிலும் கொண்டு செல்லும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்படுவதாக கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் அசத்திய கல்லூரி மாண்வர்கள்

இந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: யு19 உலகக் கோப்பை ஃபைனல்: சரித்திரம் படைத்த வங்கதேசம்... போராடித் தோற்ற இந்தியா!

Intro:           உத்தமபாளையத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளுடன் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழாவில் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்த கல்லூரி மாணவ – மாணவியர்கள்.
Body: பொதுவாக கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டு விழா நடத்தப்படுவது வழக்கம.; இதேபோன்று தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியை கல்லூரி தாளாளர் தர்வேஸ்மைதீன் புறாக்களை பறக்கவிட்டு துவக்கி வைத்ததார்.
இந்த விளையாட்டு விழாவில் மாணவ - மாணவியருக்கு பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் போன்ற தடகளம் உள்ளிட்;ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் கல்லூரி பேரசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் நவீனமாகி வரும் சூழலில் கிராமப்புற விளையாட்டுகளான ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள். பச்சை குதிரை தாண்டுதல், பல்லாங்குழி, பாண்டிஆட்டம், சொட்டாங்கல் ஆட்டம், போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இளைய சமுதாயத்தினர் மத்தியில் குறைந்து வருகிறது. இவ்வகை போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பச்சைகுதிரை, ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள் போன்ற விளையாட்டுகளும் மாணவிகளுக்கு பாண்டியாட்டம் சொட்டாங்கல், பல்லாங்குழி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதன் மூலமாக தமிழக கிராமப்புற விளையாட்டுக்கள் தொடர்ந்து இனிவரும் காலங்களில் மாணவர் மத்தியிலும் இளைய சமுதாயத்தினர் மத்தியிலும் கொண்டு செல்லும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்படுவதாக கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Conclusion: இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.