கோவையில் இருந்து தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தலைமையில் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
அதில், தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்ப எடுத்துச்செல்ல வேண்டும், ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கூடாது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாரணாசியில் பிரதமர் மோடியை சந்தித்து, அவரது காலில் விழுந்து தனது மகனை வெற்றி பெற வைப்பதற்காகத்தான் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவித்தார்.