ETV Bharat / state

அரசு பொறியியல் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடக்கம் - அரசு பொறியியல் கல்லூரி

தேனி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கியது.

File pic
author img

By

Published : Jun 8, 2019, 12:58 PM IST

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலேயே இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து அந்தந்த பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பதார்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது.

அரசு பொறியியல் கல்லூரி

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு போடி அரசு பொறியியல் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் 7 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இப்பணியினை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் தெரிவிக்கையில், போடி அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது.

இந்தாண்டு தேனி மாவட்டத்தில் 1751 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இப்பணிகள் அனைத்தும் சென்னையில் இருந்தவாறு கண்காணிக்கப்படுகிறது. இதனையடுத்து ஜூலை மாதம் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகக் கூறினார்.

Intro: போடி அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 1751 தேர்வு. கல்லூரி முதல்வர் தகவல்.

Body: தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் அண்ணா பல்கலையில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலே இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் இன்று முதல் தமிழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பதார்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு போடி அரசு பொறியியல் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று முதல் 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள இப்பணியினை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். இனைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்டதால், மாணவர்களின் பள்ளி கல்வி மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகளின் அசல் மற்றும் நகல் ஆகியவைகள் சரிபார்க்கப்படுகின்றன.
இது குறித்து கல்லூரி முதல்வர் தெரிவிக்கையில், போடி அரசு பொறியியல் கல்லூரியில் நான்கு நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபேற உள்ளது. இதற்காக தேனி மாவட்டத்தில் 1751மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இந்தாண்டு சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு இப்பணிகள் அணைத்தும் சென்னையில் இருந்தவாறு கண்காணிக்கப் படுகிறது. இதனையடுத்து ஜூலை மாதம் கவுன்சிலிங் நடைபேற உள்ளதாகக் கூறினார்.
மேலும் சென்னையில் நடைபெற்று வந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்போது அந்தந்த மாவட்டத்திலேயே நடத்தப்படுவதால் காலவிரயம் மற்றும் செலவுகள் குறைந்துள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Conclusion:பேட்டி : 1)ஜெயந்தி - பொறியியல் கல்லூரி முதல்வர், போடி.
2) ராஜாங்கம் - பெற்றோர், தேனி.
3) மூர்த்தி - பெற்றோர், அல்லிநகரம்.
4) ஆனந்த்பாபு - மாணவர், தேனி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.