தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலானது ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் என நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு, 576 இடங்களில், 1561 வாக்குச்சாவடிகள் அமையவுள்ளன. மாவட்டத்தின், 576 இடங்களில், 1561 வாக்குச்சாவடிகள், 2702 வாக்கு பதிவு இயந்திரங்கள், 2008 கட்டுப்பாடு கருவிகள், 2091 வாக்குச்சீட்டு ஒப்புகை இயந்திரங்கள் (விவிபேட்) ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கமானது நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 20 இயந்திரங்கள் வீதம் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு 80 இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.
அதன் பின்னர் காவல்துறையின் பாதுகாப்புடன், அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. மேலும் நாளை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது: திருமாவளவன்