நாடு முழுவதும், கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்கள் வசித்தப் பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த வங்கிகளை மூட மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளளார்.
அதன்படி தேனி ஒன்றியத்தில் 59 ஊர்களில் செயல்பட்டு வரும் தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை அறியாமல், முதியோர் நிதி வாங்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்து திரும்பிச் செல்கின்றனர்.
மாவட்டத்தில் வங்கிகள் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தேதியில் பயிர்க் கடன் தவணை, நகைக் கடன் ஆகியவற்றிற்கு வட்டி செலுத்த முடியாமல் அரசு வழங்கும் வட்டி மானியத்தை பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரவை மதிக்காத வங்கி... ஊரடங்கை மீறிய வாடிக்கையாளர்கள்