தேனி: கூடலூரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு விவசாய இளைஞரணி சார்பில் இரட்டை மாட்டுவண்டி எல்லை பந்தையம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தையத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்குபெற்றனர்.
இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடினது. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்த மாட்டுவண்டி பந்தையம் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த போட்டியானது கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் வரை சுமார் 8 கிலோ மீட்டார் தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்லை பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க:அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை