தேனி மாவட்டத்தில் இன்று (செப் 18) முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு தலைமையில் தனியார் நட்சத்திர விடுதியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்.எல். ஏக்கள் மகாராஜன், சரவணக்குமார் மற்றும் அனைத்து நகர, பேரூர், ஒன்றியம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில் அனைத்து கழக நிர்வாகிகளுடன் திமுக முதன்மை செயலாளர் நேரு தனித்தினியே கலந்து ஆலோசித்தார். முன்னதாக கூட்டரங்கில் நடைபெற்ற விளக்கவுரையில் ஏராளமான திமுகவினர் தகுந்த இடைவெளியின்றி, முகக்கவசம் சரிவர அணியாமலும் நெருக்கமாக கூடியதால் பலருக்கும் நோய்த் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர்கள் கலந்துகொண்ட மருத்துவ முகாமில் காற்றில் பறந்த தகுந்த இடைவெளி!