தேனி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அண்ணாவின் சிலைக்கு பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் கூட்டம் கூட்டவேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் பரிசு டோக்கன் கிடைக்கும் என பெண்கள் உட்பட பலரிடம் திமுகவினர் சொல்ல, ஏதோ பெரிதாக இருக்கும் என நம்பி பொதுமக்கள் பலரும் கூட்டத்திற்குச் சென்றனர்.
ஆனால், அங்கு கொடுக்கப்பட்டது என்னவோ டீ, வடைகளுக்கான டோக்கன் என்பதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். முனுமுனுத்தபடி இந்த டீ வடைக்காகவா வந்தோம் என்றவாறே வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் கலைந்துசென்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை!