தேனி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக திமுக கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் இன்று (டிச. 31) கருத்துகளைக் கேட்டுவருகின்றனர். தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தொழிலாளர் நல அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுவருகின்றனர்.
இதில், திமுக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், கொள்கைபரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் தேனி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'பணம் கேட்டால் மூக்கை உடைப்பார்கள், ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார்' - முதலமைச்சர் பழனிசாமி