ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் தவறான மாத்திரை பரிந்துரையா? கை, கால் செயலிழந்ததாக தொழிலாளியின் உறவினர்கள் குற்றச்சாட்டு..! தேனியில் நடந்தது என்ன? - theni news today

அரசு மருத்துவமனையில் தவறான மாத்திரை கொடுக்கப்பட்டதால் தொழிலாளிக்கு கை, கால் செயலிழந்ததாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் அவரது உறவினர்கள் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

disability-of-arm-and-leg-by-changing-the-pill-in-government-hospital-theni

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 12:00 PM IST

Updated : Sep 27, 2023, 1:28 PM IST

பூதிப்புரம் : தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 40). கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆதிபராசக்தி என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நரம்பியல் பிரச்சினை தொடர்பாக தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருந்தார். தொடர்ந்து நரம்பியல் சிகிச்சைக்காண மருந்துகளை உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவர் பரிந்துரையின் பேரில் ராமராஜ் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தபோது தலைப்பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கட்டிகளை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டதை தொடர்ந்து புற்றுநோய்க்கான மருந்துகளையும், நரம்பியல் நோய்க்கான மருந்துகளையும் மேற்கொள்ள ராம்ராஜ்க்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோய்க்கான மருந்துகளை மதுரை அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு முறை பெற்றுக் கொள்ளவும் நரம்பியல் சிகிச்சை தொடர்பான மருந்துகளை அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கடந்த 11ஆம் தேதி பூதிப்புரம் அரசு மருத்துமனையில் பெற்ற நரம்பியல் மருந்துகளை உட்கொள்ளும் போது அவரின் உடல்நிலையில் சிறிது மாற்றங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் திடீரென அவரின் கை கால்கள் செயலிழந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரின் மனைவி அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்த போது நரம்பியல் மருந்துகளுடன் ரத்த அழுத்த மாத்திரைகளையும் அவர் எடுத்துக் கொண்டதால் இதுபோல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராம்ராஜின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து பாதிக்கபட்ட ராம்ராஜின் சகோதரி கூறிகையில், "அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றிக் கொடுத்ததால் தன்னுடைய சகோதரர் கை, கால்கள் செயல் இழந்துள்ளார். இதனால் தங்கள் குடும்பம் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தனது சகோதரர் உடல் நிலையை சரி செய்ய ஆட்சியர் உதவ வேண்டும்" என அவர் தெரிவித்து உள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம் அரசு மருத்துவமனையில் நரம்பியல் மாத்திரைகளுக்கு பதிலாக ரத்த அழுத்த மாத்திரைகள் கொடுக்கப்பட்டு ஒருவரின் கை கால்கள் செயலிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புகாருக்கு ஆளான அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தால் அதனை ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாக பதிவு செய்ய தயாராக உள்ளது.

இதையும் படிங்க: தனியார் நிதி நிறுவனத்தால் பறிபோன உயிர்? கடனை கட்ட தாமதமானதால் நிதி நிறுவனம் மிரட்டலா? பெண்ணின் தற்கொலையில் நடந்தது என்ன?

Last Updated : Sep 27, 2023, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.