ETV Bharat / state

இயக்குநர் தருண் கோபியின் சகோதரர் சாலை விபத்தில் உயிரிழப்பு - இயக்குநர் தருண்கோபியின் சகோதரர் சாலை விபத்தில் பலி

தேனி: கம்பம் அருகே நடந்த சாலை விபத்தில் இயக்குநரும், நடிகருமான தருண் கோபியின் சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Director Tarun Gopi brother killed in road accident at theni

author img

By

Published : Dec 21, 2020, 5:49 PM IST

தேனி மாவட்டம் கூடலூர் சுக்காங்கல்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). கூடலூர் பகுதியில் அரிசிக்கடை நடத்தி வந்த இவர் மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட நடிகரும், திமிரு, காளை உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான தருண் கோபியின் அண்ணன் ஆவார்.

இவர் நேற்றிரவு கம்பத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கூடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம் பிரிவு அருகே கம்பத்தை சார்ந்த நவீன் (22) மற்றும் விக்னேஷ்குமார்(21) ஆகியோர் கம்பம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர்.

இந்நிலையில், நவீன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜேந்திரன் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் வடக்கு காவல் துறையினர், உயிரிழந்த ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த நவீன் மற்றும் விக்னேஷ்குமார், தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் கோர சாலை விபத்து - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.