ETV Bharat / state

பெரியகுளம் நகராட்சி: 6 மாதமாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் தர்ணா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 3:43 PM IST

Periyakulam Municipality: பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஊழியர்கள் ஏராளமானோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Dharna strike
தர்ணா போராட்டம்

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தேனி: பெரியகுளம் நகராட்சியில் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் ராம்கோ நிறுவனம் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகவும், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் இன்று வரை ஊதியம் வழங்காததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து விட்டு வள்ளுவர் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஒப்பந்த தூய்மை பணியாளர் கூறுகையில், "நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றி மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்றும் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை. அரசு நிர்ணயித்த ஊதியத்தில் பிஎஃப் பணம் எவ்வளவு பிடித்தம் செய்கிறார்கள் என்ற விபரத்தையும் ஒப்பந்ததாரர் வழங்குவதில்லை என்றும், தங்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிரச்னை குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, "பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மூன்று மாத காசோலை வழங்காமல் உள்ளதால் தூய்மை பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியவில்லை" என குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:தீபாவளி 2023; சென்னையில் இருந்து ஆம்னி பேருந்தில் ஊருக்குச் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.