சென்னை: தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மீது அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இன்று ஜூலை 6-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன் முக்கிய அம்சங்கள்.
1. ஓ.பி.ரவீந்திரநாத் வாணி ஃபேப்ரிக்ஸ் இயக்குநராக இருந்தபோது பெற்ற சம்பளத்தை மறைத்துள்ளார்.
2. விவசாயத்தில் மட்டுமே வருமானம் என்று கூறிவிட்டு வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வரும் வருமானத்தையும் மூடி மறைத்துள்ளார்.
3. ரூ.4 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருக்கும் நிலையில், வேட்புமனுவில் ரூ.1 கோடியே 35 லட்சத்தை மட்டுமே காட்டியுள்ளார்.
4. வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தின் 15,000 பங்குகளை வேட்பு மனுவில் மறைத்துள்ளார்.
5. இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி உரிய விசாரணை நடத்தவில்லை.
இதையும் படிங்க: 'ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது' என்ற தீர்ப்பால் தர்மம் வென்றது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
6. சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க மனுதாரர் மிலானி எந்த ஒரு சுயாதீன சாட்சியையும் சேர்க்கவில்லை. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் பணம் கொடுத்தது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பணமோசடி தொடர்பான கிரிமினல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
7. ரவீந்திரநாத் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், தகவலை மறைத்தார் என்ற காரணத்திற்காக அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
8.சொத்துக்கள், கடன்கள், பொறுப்புகள் மற்றும் வருமானத்தை மறைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்வது முறையற்றது. எனவே இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொண்டால் ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் வெற்றி செல்லாது என நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பளித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தேனியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தந்தையுமான ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதன்படி நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலோ அல்லது தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்யதாலோ அதிமுகவுக்கு மக்களவையில் இருக்கும் ஒரே ஒரு உறுப்பினரும் இல்லாமல் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: O.P.Ravindranath: தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!