தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. போடிநாயக்கனூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில், பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் நேற்று மாலையில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமில் தேர்வான ஆயிரத்து 403 நபர்களுக்கான பணி நியமன ஆணை, 262 நபர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதன்படி, எந்த நேரத்திலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது' என்றார்.
இந்நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும்: ராஜன் செல்லப்பா பேட்டி