ETV Bharat / state

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

தேனி: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லாமல்,நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு பணியாளர் பேட்டி
author img

By

Published : Jun 14, 2019, 7:44 PM IST

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.இந்தப் பகுதியில் சேரும் குப்பைகளை அகற்ற 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 66 பேர் நிரந்தரமாகவும், 96 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு பணியாளர் பேட்டி

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இன்றுவரை எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.18ஆயிரத்து 884 வீதம் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதையும் இதுவரை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர்.

Intro: கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Body:         தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான தெருக்கள் உள்ள இந்நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று குப்பைகளை பெற்று அவற்றை குப்பை கிட்டங்கியில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் 66 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 96 பேரும் உள்ளனர்.
         இந்நிலையில் இன்று காலையில், ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆண்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள், கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.18,884 வீதம் கூலி வழங்க வேண்டும், தனியார் ஒப்பந்தததை ரத்து செய்து நகராட்சி மூலமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
         கம்பம் நகராட்சி அலுவலகத்தின் முன் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்;கள் கோசங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிரந்தரமாக நிறைவேறும் வரை போராடுவோம் என எச்சரித்தனர்.
Conclusion:பேட்டி - சத்யா, துப்புரவு தொழிலாளர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.