ETV Bharat / state

பசு மாட்டை வேட்டையாடிய 3 புலிகள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ! - Theni news

தமிழ்நாடு - கேரள எல்லையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை இழுத்துச் சென்ற 3 புலிகள் அதனை சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசு மாட்டை வேட்டையாடிய 3 புலிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

author img

By

Published : Feb 27, 2023, 12:49 PM IST

தமிழ்நாடு - கேரள எல்லையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை இழுத்துச் சென்று 3 புலிகள் சாப்பிடும் சிசிடிவி காட்சிகள்

தேனி: தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வண்டி பெரியாறு பகுதியில் ஒருவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் இந்த இரண்டு பசு மாடுகளையும் அவர், அந்த பகுதியில் உள்ள காஃபி தோட்டத்துக்கு அருகில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். பின்னர் மாலை நேரத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த 2 பசு மாடுகளில் ஒரு மாடு மட்டும் வீடு திரும்பிய நிலையில், மற்றொரு மாடு வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் உள்படப் பலரும் மாட்டைத் தேடத் தொடங்கினர். அப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில், காணாமல் போன பசு மாடு பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், பசுவைப் புலிகள் அடித்துக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வனத்துறையினருக்குப் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில், 3 புலிகள் பசுமாட்டைக் கொன்று அதனை உட்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதிலும் அவை ஒன்றன்பின் ஒன்றாக மாட்டைக் கடித்துக் கொள்ளும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

மேலும் இந்த பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் தேயிலை, காப்பி மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் பணி புரிந்து வரும் நிலையில், இந்த பகுதியில் புலிகள் பசு மாட்டைக் கொன்று தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இந்த பகுதியை ஒட்டி பெரியார் புலிகள் காப்பகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் புகுந்த சிறுத்தைகள் - சிசிடிவி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.