ETV Bharat / state

கம்பம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள் - Scam councilor union office protest

கம்பம் அருகே சுருளிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை
முற்றுகை
author img

By

Published : Aug 2, 2022, 12:42 PM IST

தேனி: கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் தலைவராக நாகமணி வெங்கடேசன் மற்றும் துணைத் தலைவராக ஜெயந்தி மாலா ஆகியோர் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஊராட்சி மன்ற சாதாரண கூட்டத்தில் வரவு செலவு செய்த தீர்மானங்களில் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். மனு கொடுத்து 50 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஊராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (ஆக.1) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையலான போலீசார், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று முற்றுகை போராட்டம் நடத்திய உறுப்பினர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இதையும் படிங்க: மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்காக மட்டுமே - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.