ETV Bharat / state

கரோனா வார்டுக்கு மக்கள் எதிர்ப்பு - தனியார் பொறியியல் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு

தேனி: ஆண்டிபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியை முற்றுகையிட்டனர்.

corona-ward-issue-village-people-mutrugai

author img

By

Published : Apr 2, 2020, 11:38 PM IST

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களைத் தங்க வைத்து கண்காணிப்பதற்காக தனியார் கல்லூரி கட்டடங்களை பயன்படுத்த அலுவலர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியை அவர்கள் பார்வையிட்டனர்.

இந்நிலையில் கல்லூரியில் கரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியைச் சுற்றியுள்ள கிராமங்களான திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளைமுகன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து கல்லூரி வளாகத்தை முற்றுகையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் மக்களை சமாதானப்படுத்தி வெளியேற்ற முயன்றனர். ஆனால் வைரஸ் தொற்று உள்ளவர்களை இங்கு தங்க வைத்தால் எங்கள் பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள், எனவே நீங்கள் மாற்று இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று வலியுறுத்தினர்.

கரோனா வார்டுக்கு மக்கள் எதிர்ப்பு

தொடர்ந்து அலுவலர்களும், காவல் துறையினரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.