ETV Bharat / state

தேனியில் எகிறி அடிக்கும் கரோனா - ஒரே நாளில் 283 பேருக்கு தொற்று - Corona infection in 283 people

தேனி: ராணுவ வீரர், துணை வட்டாட்சியர், அஞ்சல் அலுவலர் என ஒரே நாளில் 283 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

corona
corona
author img

By

Published : Jul 29, 2020, 12:34 PM IST

தேனி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 283 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், தேனி டாஸ்மாக் அலுவலக துணை வட்டாட்சியர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர், ராசிங்காபுரத்தை சேர்ந்த பெண் மருத்துவர், டி.சிந்தலைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையை ஆய்வக தொழில் நுட்புநர், கோம்பையைச் சேர்ந்த ராணுவ வீரர், கோம்பை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர், கூடலூர் வடக்கு காவல்நிலைய பெண் காவலர் உள்ளிட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 337ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அல்லிநகரம் நகராட்சியைச் சேர்ந்த 84 முதியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேனியில் இதுவரை 2ஆயிரத்து 255 பேர் குணமடைந்தனர். 2ஆயிரத்து 31 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.