ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கல் - நோயாளிகள் போராட்டம் - தேனி மாவட்டம்

தேனி: சித்தா பிரிவில் கரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக நோயாளிகள் போராட்டம் செய்தனர்.

Breaking News
author img

By

Published : Jul 26, 2020, 7:00 PM IST

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை ஏறக்குறைய 3,500க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 18ஆம் தேதி முதல் பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 105 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த முகாமில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகக் கூறி சிகிச்சையில் இருந்த அனைவரும் திடீரென தங்களது அறையை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததயைடுத்து கலைந்து அவரவர் அறைக்கு சென்றனர். இதேபோல் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு சரிவர வழங்கவில்லை என நேற்று(ஜூலை 26) இரவு உணவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு சரி வர வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உணவுத்தரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.