தொழில் நுட்ப வளர்ச்சியாலும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் உண்ணும் உணவு வரை இணையதள வர்த்தகத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இணையதள வர்த்தகமானது கிராமங்களை கூட விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக வெகுஜன மக்களிடையே நாள்தோறும் இணையதள வர்த்தகத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறு, குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட் போன்ற இணையதள வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படுவதாக தேனி மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க மாநில தலைவர் கணேஷ் ராம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் செயல்பட்டு வரும் இணையதள வர்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: