தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி சீத்தாராம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன், இவரது மகன் ராகேந்திரபிரசாத்(18). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.
திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த பிரசாத், சினிமாவிற்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் திங்கள்கிழமை வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் ஜக்கம்பட்டி சீத்தாராம் தாஸ் நகருக்கு பின்புறம் உடலில் காயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.