ETV Bharat / state

வைகோவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிக்கெட் பெறுவதில் மதிமுகவினரிடையே மோதல்

தேனியில் வைகோவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிக்கெட் பெறுவதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு துரை வைகோ முன்னிலையில் மதிமுகவினர் மோதி கொண்டனர்.

வைகோவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிக்கெட் பெறுவதில் மதிமுகவினரிடையே மோதல்
வைகோவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிக்கெட் பெறுவதில் மதிமுகவினரிடையே மோதல்
author img

By

Published : Oct 8, 2022, 7:52 PM IST

தேனி: வைகோவின் வாழ்க்கை வரலாற்று ஆவண படமான ’மாமனிதன் வைகோ’ தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கில் திரையிட்டப்பட்டுவருகிறது. இதனா பல்வேறு திரையரங்குகளில் திரையிடும் முயற்சியில் மதிமுகவினர் முயற்சித்துவருகின்றனர். அந்த வகையில் தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் மாமனிதன் ஆவணபடத்தை வெளியிடப்பட்டது. மதிமுக சார்பில் திரையிடுவதற்காக ஏற்பாடுகளை தேனி மாவட்ட மதிமுகவினர் செய்து இருந்தனர். இதில் வைகோவின் மகனும், மதிமுகவின் தலைமை கழக செயலாளருமான துரை வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த ஆவண படத்தை பார்ப்பதற்காக மதிமுக சார்பில் வழங்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளையும் தேனி மாவட்ட மதிமுக பொறுப்பாளர் கே. ராமகிருஷ்னன் பெற்று அதனை மதிமுகவினருக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் துரை வைகோவின் தொண்டர்களும் டிக்கெட்டை பெற்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ராமகிருஷனனிடம் டிக்கெட் கேட்ட போது அவரை ராமகிருஷ்னன் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிர்வாகியும் ராமகிருஷ்னனை அடிக்க பாய்ந்து ஒருமையில் திட்டியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இவர்கள் இருவரையும் கட்சி நிர்வாகிகள் விலக்கி விட முயற்சி செய்த நிலையில் அங்கிருந்த துரை வைகோவிடம் அவர்கள் முறையிட்டனர்.

பின்னர் துரை வைக்கோ பேசி சமாதானம் செய்து அவர்களை திரையரங்கிற்குள் படம் பார்க்க அனுப்பி வைத்தார்.

வைகோவின் வாழ்க்கை வரலாறு படத்தின் டிக்கெட் பெறுவதில் மதிமுகவினரிடையே மோதல்

இதையும் படிங்க: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.