ETV Bharat / state

கல்குவாரியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு; தாய் கண் முன்னே நேர்ந்த துயரம்!

author img

By

Published : Nov 10, 2019, 5:00 PM IST

தேனி: ஆண்டிபட்டி அருகே கல்குவாரி ஒன்றில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

theni child Quarry death

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி. ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ்(27). கூலி வேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்துவிட்டார். இத்தம்பதியினருக்கு ஐந்து வயதில் விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்த நிலையில், வினிதா என்ற வேறொரு பெண்ணை நாகராஜ் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆறு மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுவன் விக்னேஸ்வரனை, இரண்டாவது தாய் வினிதா தன் துணிகளைத் துவைப்பதற்காக அழைத்துக்கொண்டு அருகிலுள்ள வண்ணாத்திப்பாறை கல்குவாரிக்குச் சென்றுள்ளார். அங்கு பாறைகள் மேல் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் விக்னேஸ்வரன் திடீரென தண்ணீரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

கல்குவாரியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

அப்போது, வினிதா சத்தம் போட அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்த சிறுவனைத் தேடினர். சிறிது நேரத் தேடுதலுக்குப் பின்பு சிறுவனின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு அளிக்கலாம் - அதிமுக அறிவிப்பு

Intro: ஆண்டிபட்டி அருகே கல்குவாரி நீர்தேக்கத்தில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பலி. காவல்துறையினர் விசாரணை.
Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ்(27). கூலிவேலை செய்து வரும் இவரது முதல் மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு 5வயதில் விக்னேஸ்வரன் என்ற மகன் உள்ள நிலையில், வினிதா என்ற பெண்ணை நாகராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 மாத குழந்தை ஓன்று உள்ளது. இதனிடையே தந்தையின் பராமரிப்பில் சிறுவன் விக்னேஸ்வரன் இருந்து வந்துள்ளான்.
இந்நிலையில் வினிதா துணிகள் துவைப்பதற்காக சிறுவனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள வண்ணாத்திப்பாறை கல்குவாரி சென்றார். அப்போது பாறைகள் மேல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விக்னேஷ்வரன் திடீரென தண்ணீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைகண்ட வினிதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் தண்ணீரில் விழுந்த சிறுவனை தேடினர். சிறிது நேரம் தேடுதலுக்கு பின் சிறுவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஸ்வரன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion: சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.