தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேமுதிக பிரமுகரின் திருமணத்தை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நடத்திவைத்தார். திருமண நிகழ்வுக்குப் பின்பு, பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் போன்றவற்றை அவர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட தேமுதிக தயாராக இருப்பதாகவும், ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், இறுதிகட்ட பரப்புரையில் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஜினி அரசியல் வருகை குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். நடிகர் ரஜினிகாந்த முதலில் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்து மக்களைச் சந்திக்கட்டும். பிறகு அவரது அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேசி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும்.
இதையும் படிங்க: 'அதிமுக, தேமுதிக, பாமகவிலும் வாரிசு அரசியல் உள்ளது'- கண்ணப்பன்