ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு! - முல்லைப் பெரியாறு அணை

தேனி: தென்மேற்கு பருவமவை கேரளாவில் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை
author img

By

Published : Jun 4, 2019, 11:37 AM IST

கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.

2014 மே 7ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அணையைக் கண்காணித்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். உறுப்பினர்களாகத் தமிழ்நாடு பொதுப்பணித் துறைச் செயலர் பிரபாகரன், கேரள நீர்வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஸ்வால் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்புப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும். கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை மறுநாள் 6ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மூவர் குழுவினர் இன்று அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளனர்.

     முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் இன்று ஆய்வு நடத்த உள்ளனர். இதில் பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்  உள்ளனர்.
   கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 5மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.  கடந்த 2014 மே 7ஆம் தேதி  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். உறுப்பினர்களாக தமிழக பொதுப்பணித் துறை செயலர் பிரபாகரன், கேரள நீர்வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஸ்வால் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்புப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டது.
     தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை மறுநாள் 6ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் மூவர் குழுவினர் இன்று அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளனர். 
     முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த 2014இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையைப் பலப்படுத்திய பின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கேரள அரசின் கெடுபிடியால் இதுவரை பேபி அணையைப் பலப்படுத்த முடியவில்லை. அத்துடன் கடந்த 2000 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு சென்ற மின் இணைப்பை கேரள மின்வாரியம் துண்டித்தது. இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால், ஜெனரேட்டர் மூலம் மட்டுமே மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வல்லக்கடவிலிருந்து அணைப்பகுதிக்கு வரும் வனப்பாதை சீரமைக்கப்படவில்லை.
     பல ஆண்டுகளாக நிலவி  வரும் இப்பிரச்சினைகளை மூவர் குழுவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.

File Shot Visual sent to FTP
Slug Name As: 

1)TN_TNI_MULLAI PERIYAR DAM FILE SHOT_VIS_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

E TV Bharat
District Reporter - Theni .
Mobile : 6309994707
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.