தேனி மாவட்டம், போடி நகராட்சிக்குட்பட்ட 6-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த நான்கு வருடங்களாக போடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து அரசால் தடை செய்யப்ப்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக காராவல்துறையினர் அவர் மீது பலமுறை நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் முருகேசன் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் கஞ்சா வாங்குவது போல முருகேசனிடம் பேசிக் கொண்டிருந்த போது வீட்டில் வைத்து 1கிலோ கஞ்சாவுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகேசனை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்..
இதையும் படிங்க: ரயில்வே சுரங்கப் பாதையில் ஆண் உடல் சடலமாக மீட்பு!