மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டமாக உள்ளது எனக் கூறி எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிவருகின்றனர்.
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குறியாக்குகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர். பாஜக இந்திய தேசம் என்னும் பெயரில் மத தீவிரவாதத்தைத் திணிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்த சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அமைக்க நினைக்கிறது என்றும் தெரிவித்துவருகின்றனர். டெல்லி கலவரம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.வை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராடிவருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாஜகவினர் சி.ஏ.ஏ.வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்ட பாஜக சார்பில் பெரியகுளம் சி.ஏ.ஏ. ஆதரவு பேரணி நடைபெற்றது. பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் பாஜக முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பேரணியின்போது பாஜகவினர் காவி நிறம் பூசிய திருவள்ளுர் சிலை படத்துடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை வெளியீடு!