உலகையே உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பலருக்கு இன்னும் அரசின் நிவாரண உதவிகள் முழுவதுமாக சென்றடையவில்லை.
இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் உள்ள மயானம் அருகே தரமற்ற அரிசி மூட்டைகளை யாரோ சிலர் வீசிச்சென்றுள்ளனர்.
அவற்றில் சில மூட்டைகளில் புழுக்கள் கலந்திருந்தும், அப்பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் அவற்றை அள்ளிச் சென்றனர்.
இதுபோன்ற தரமற்ற அரிசி மூட்டைகளை முறையாக அகற்றாமல், இப்படி வெட்டவெளியில் கொட்டிச் செல்வதால், அவற்றை ஏழை, எளிய மக்கள் அள்ளிச் செல்ல வழிவகுக்கிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கிய அமைச்சர்!