சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டனாக அருண் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சூட்டப்பட்ட கேப்டன் உடையில் பல வண்ணங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சுவாரஸ்யம் குறைவாக இருந்தால் அல்லது கேப்டனாக அருண் வீட்டை சரியாக வழி நடத்தவில்லை என்றால் அந்த ஐந்து வண்ண ஸ்டிக்கர்களில் இருந்து போட்டியாளர்கள் ஒரு ஸ்டிக்கரை லிவிங் ஏரியாவில் வைத்து அகற்றுவர். ஆக மொத்தம் இந்த வாரம் கேப்டனுக்கு பிரச்சனை ஏற்படும் அளவில் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பெண்கள் அணியிலிருந்து யாரை ஆண்கள் அணிக்கு அனுப்புவது குறித்த உரையாடலில் பெரும் சண்டை ஏற்பட்டது. பெண்கள் அணியில் இருக்கும் தர்ஷிகா, ஜாக்குலின், சவுந்தர்யா ஆகியோர் ரியாவை ஆண்கள் அணிக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்தனர். இதற்கு மஞ்சரி மற்றும் ரியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மஞ்சரி ரியாவிடம் ”நீங்க ஆண்கள் அணிக்கு போகாதீங்க, உங்களை மண்டையை கழுவுறாங்க” என்ற வார்த்தையை விட்டார்.
இதற்கு பெண்கள் அணியினர் மொத்தமாக சேர்ந்து மஞ்சரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு வழியாக பெண்கள் அணியிலிருந்து ஆண்கள் அணிக்கு அன்ஷிதா அனுப்பப்பட்டார். அதேபோல் ஆண்கள் அணியிலிருந்து ரயான் பெண்கள் அணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த வார ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது.
கடந்த வாரம் இடம் மாற்றம் செய்யப்பட்ட ரானவ், சவுந்தர்யாவை நாமினேட் செய்தார். பின்னர் ஆண்கள் அணியிலிருந்து அதிக அளவில் வர்ஷினியை நாமினேட் செய்தனர். பெண்கள் அதிக அளவில் ரானவ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை நாமினேட் செய்தனர். இதனைத்தொடர்ந்து இரு அணிகளும் ஷாப்பிங் செய்ய வைக்கப்பட்ட டாஸ்கில் பெண்கள் அணி 8000 பிக்பாஸ் கரன்சி பெற்று வெற்றி பெற்றனர். ஆண்கள் அணியினர் 4000 புள்ளிகள் மட்டுமே பெற்றனர்.
இதையும் படிங்க: "20 கோடி செலுத்தாமல் 'கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஷாப்பிங் டாஸ்கில் இரு அணிகளும் தங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு ஷாப்பிங் செய்தனர். இதனைத்தொடர்ந்து அன்ஷிதாவிற்கும் ஆண்கள் அணியினருக்கும் சாப்பாடு விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்தாலும் பெரிய அளவில் சுவாரஸ்யம் அதிகரிக்கவில்லை.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்