ETV Bharat / state

ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடலுக்கு ராணுவ மரியாதை இல்லை - உறவினர்கள், மக்கள் போராட்டம்!

பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழக வீரர் யோகேஷ்குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உரிய ராணுவ மரியாதை கொடுக்கப்படாததைக் கண்டித்து, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ARMY
யோகேஷ்
author img

By

Published : Apr 14, 2023, 5:03 PM IST

ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடலுக்கு ராணுவ மரியாதை இல்லை - உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்

தேனி: தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மூணாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார்(24), கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

கடந்த 12ஆம் தேதி அதிகாலையில், பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் யோகேஷ் குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று(ஏப்.14) காலை மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ராணுவத்தினர் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், யோகேஷ் குமாரின் உறவினர்கள், அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், சொந்த ஊரான தேனி மாவட்டம், மூணாண்டிபட்டிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரெங்கநாதர் கோவில் மைதானத்தில் கூடியிருந்த கிராம மக்கள் சார்பாக மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்ட பிறகு, அவரது உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடலுக்கு, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் யோகேஷ் உடலை நல்லடக்கம் செய்யத் தயாரானபோது, உரிய ராணுவ மரியாதை அளிக்கப்படாததால் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். ராணுவ மரியாதை வழங்கும்வரை நல்லடக்கம் செய்ய மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் வீட்டருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

அதன் பிறகு, ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடலை நல்லடக்கம் செய்தனர். ராணுவ மரியாதை செலுத்தாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பதின்டா ராணுவ மைய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாத முகாந்திரமா? அம்ரித் பால் சிங்க்கு தொடர்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.