ETV Bharat / state

'பாரத் பந்த்' எதிரொலி: கேரளாவில் முழு அடைப்பு; வெறிச்சோடிய குமுளி

author img

By

Published : Jan 8, 2020, 4:10 PM IST

தேனி: கேரளாவில் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள குமுளியில் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

bharath bandh
bharath bandh

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக கேரளாவில் அனைத்துத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து இருக்காது எனவும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள குமுளி, இடுக்கி மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் என்பதால் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

வெறிச்சோடிய குமிழி

மேலும், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் யாரும் இன்று பணிக்கு செல்ல வில்லை. தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு , போடி மெட்டு ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்கின்ற வாகனங்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

இதையும் படிங்க: 'சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்' - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம்!

Intro: மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெறும் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தமிழக – கேரள எல்லையில் உள்ள குமுளியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
Body:         மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அம்மாநிலத்தில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை 6 முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரந்திற்கு பேருந்துகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து இருக்காது எனவும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும் அறிவித்து இருந்தது.
         இதன் காரணமாக தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள குமுளி மற்றும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்து. சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Conclusion: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் யாரும் இன்று வேலைக்குச் செல்லவில்லை. தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்கின்ற வாகனங்கள் எல்லையிலே நிறுத்தப்பட்டன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.