தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி உத்தமபாளையம் அருகே உள்ள சுருளி அருவியில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் குளிக்க பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அருவியில் இருந்து வரும் நீரின் வேகம் அதிகரித்துவருவதால் அருவியில் இருந்து பாறைகள், கற்கள் விழும் அபாயம் உள்ள காரணத்தால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து சீரான பின்பு அருவியில் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘கட்சி தொண்டனும் கட்சியின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும்’ - ஓபிஎஸ்