தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால், கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் நீரின் அளவு குறையாத நிலையில், நேற்று வரை 43 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீர்வரத்து குறைந்து சீராக உள்ள நிலையில், இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். இதனிடையே, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், அதிகாலை முதல் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதையும் படிங்க: ஐந்து தலைமுறைகளாகச் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் மலைக் கிராம மக்கள்.. சாலை அமைத்துத்தரக் கோரிக்கை..