ETV Bharat / state

தடுப்பணை உடைந்து ஓர் ஆண்டாகிறது - நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித் துறை? - தடுப்பணை பாதிப்பு

ஓர் ஆண்டுக்கு மேலாக உடைந்த தடுப்பணைகளை சீரமைக்காத பொதுப்பணி துறையினரால் விவசாய பணிகள் முடங்கும் அபாயம், 300 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பணை உடைந்து ஓர் ஆண்டாகிறது - நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித் துறை?

author img

By

Published : Sep 25, 2022, 6:47 AM IST

தேனி: பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்காக உருவாக்கப்பட்ட சின்ன பூலாங்குளம் மற்றும் பெரிய- பூலாங்குளம் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு கும்பக்கரை அருவியில் இருந்து பிரித்து வரும் நீர் வாய்க்கால் மூலம் இந்த கண்மாய்களுக்கு வந்து சேருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நீர் பிரித்து அனுப்புவதற்காக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து முற்றிலும் சேதம் ஏற்பட்டது. தடுப்பணை உடைந்து ஓராண்டுக்கு மேலாக சீரமைக்கப்படாத நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பாக பெய்த கனமழையிலும் இரண்டு குளத்திற்கும் நீர் செல்வதில் தடை ஏற்பட்டது.

மேலும், தொடர் கனமழையால் பெரியகுளம் பகுதியிலுள்ள அனைத்து குளங்களும் நீர் நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நேரத்தில் இந்த இரண்டு குளங்களுக்கு மட்டும் முற்றிலும் நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது.

இதனால் குளத்தை நம்பி உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில், நெல் சாகுபடிக்காக விதை நெல் பாவி உள்ளனர். இந்நிலையில் குளத்தில் முற்றிலும் நீர் இல்லாததால் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிணறுகளிலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குளத்து நீரை நம்பி உள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கீழ வடகரை விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு, தற்காலிக நடவடிக்கை எடுத்தாவது குளத்திற்கு நீர் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பணை உடைந்து ஓர் ஆண்டாகிறது - நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித் துறை?

இதையும் படிங்க: பேரனுக்கு நீச்சல் பயிற்சி - தாத்தா உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.