ETV Bharat / state

ஸ்டாலினும், ராசாவும் அரை நிர்வாணத்தில் விரைவில் வருவார்கள் - அர்ஜுன் சம்பத் தாக்கு - அர்ஜுன் சம்பத் தாக்கு

தமிழில் கந்த சஷ்டி கவசத்தைச் சொல்ல நாங்கள் தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்டதும் ஆ.ராசாவைத் தொடர்ந்து ஸ்டாலினும் அலகு குத்திக் கொண்டு, அரை நிர்வாணத்துடன் விரைவில் வருவார்கள் எனவும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Theni arjun sampath press meet
Theni arjun sampath press meet
author img

By

Published : Feb 1, 2021, 6:52 AM IST

Updated : Feb 1, 2021, 7:24 AM IST

தேனி: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறும்போது, 'மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களில் திருத்தங்கள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது. எந்தவித காரணத்தைக் கொண்டும் மத்திய அரசு வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூடாது. டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட தேச விரோதிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 3ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்' என்றார்.

ஸ்டாலினும், ராசாவும் அரை நிர்வாணத்தில் விரைவில் வருவார்கள் - அர்ஜுன் சம்பத் தாக்கு

மேலும், மேடைதோறும் கைகளில் வேல் ஏந்திவரும் ஸ்டாலின், தேர்தலுக்காக இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழில் நாங்கள் கந்த சஷ்டி கவசம் கூறுவதற்குத் தயாராக இருக்கிறோம். அதனைக் கேட்டு ஆ.ராசா, ஸ்டாலின் போன்றோர் அலகு குத்தி, அரை நிர்வாணத்துடன் விரைவில் செல்வார்கள்' என்றார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ’இதை அதிமுகவினரிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை கரோனா தொற்றிலிருந்து மீண்டு சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்' எனத் தெரிவித்தார்.

Last Updated : Feb 1, 2021, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.