ETV Bharat / state

மேற்குத்தொடர்ச்சி மலையில் வனவிலங்குகள் வேட்டையாடல்

author img

By

Published : Jan 8, 2020, 1:50 PM IST

தேனி: ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் தப்பியோடியது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆண்டிபட்டியில் வனவிலங்குகள் வேட்டையாடல்
ஆண்டிபட்டியில் வனவிலங்குகள் வேட்டையாடல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, கருமந்தி, சிங்கவால்குரங்கு, காட்டுமாடு, மான், செந்நாய், வரையாடு உள்ளிட்ட பலவகை வனவிலங்குகள் உள்ளன.

இந்த வனப்பகுதி கேரள மாநில எல்லைப்பகுதியில் உள்ளதால் அடையாளம் தெரியாத நபர்கள் வேட்டையாடிவிட்டு தப்பிச்செல்வது வழக்கமாக இருந்துவருகிறது. இதனைத் தடுக்க கண்டமனூர் வனத் துறையினர் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கண்டமனூர் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத் துறையினர் பீட் சன்னாசியப்பன் கோயில் அருகே ரோந்து செல்லும்போது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக வனத் துறையினர் வனப்பகுதியிலிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க முயற்சித்தனர். வனத் துறையினர் சுற்றிவளைத்ததை அறிந்த வேட்டைக்கும்பல் சரணடைவதைப்போல் போக்குக்காட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

ஆண்டிபட்டியில் வனவிலங்குகள் வேட்டையாடல்

பின்னர் வனத் துறையினர் வேட்டைக்கும்பல் விட்டுச்சென்ற நாட்டுத்துப்பாக்கி, கருமந்தி ஆகியவற்றை கைப்பற்றி ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் வேட்டைக்கும்பல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கொடைக்கான‌லில் காட்டுப்ப‌ன்றியை வேட்டையாடிய‌ 4 பேர் கைது!

Intro: ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் தப்பியோட்டம். பறிமுதல் செய்த நாட்டுதுப்பாக்கி, கருமந்தி உடல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. வனத்துறையினர் விசாரணை.
Body: தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, கருமந்தி, சிங்கவால்குரங்கு, காட்டுமாடு, மான், செந்நாய், வரையாடு, உள்ளிட்ட பல்வகை உயிரின வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதி கேரள மாநில எல்கைப்பகுதியில் உள்ளதால் வேட்டைக்கும்பல்களும் இருமாநில எல்கைப்பகுதியில் இருந்தும் உள்ளே வந்து வனவிலங்குகளை வேட்டையாடிவிட்டு தப்பிச்செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்க கண்டமனூர் வனத்துறையினரும் துப்பாக்கிகளுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கண்டமனூர் வனச்சரக வனவர் செல்வராஜ் தலைமையில் கண்டமனூர் பீட் சன்னாசியப்பன் கோவில் அருகே ரோந்து செல்லும் போது அடர்ந்த வனப்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. இதனையடுத்து அப்பகுதியை வனத்துறையினர் உடனடியாக சுற்றிவளைத்து துப்பாக்கிகளுடன் கூடிய 5 பேர்கள் கொண்ட வேட்டைக்கும்பலை பிடிக்க முயற்சித்தனர். வனத்துறையினர் சுற்றிவளைத்ததை அறிந்த வேட்டைக்கும்பல் சரணடைவதைப்போல் போக்குக்காட்டிவிட்டு ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் வேட்டையாடிய ஒரு கருமந்தியை மட்டும் கீழே போட்டுவிட்டு மற்றவைகளை எடுத்துக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர்.
சற்றுநேரம் கழித்து வேட்டைக்கும்பல் தப்பியோடியதை அறிந்த கண்டமனூர் வனத்துறையினர் வேட்டைக்கும்பல் விட்டுச்சென்ற ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் கருமந்தியை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டு தப்பியோடிய வேட்டைக்கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.
         Conclusion: துப்பாக்கியுடன் வனவிலங்குளை வேட்டையாடி தப்பிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.