ETV Bharat / state

"ஓடிடி தளத்தில் தணிக்கை" - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு - ott regulation petition - OTT REGULATION PETITION

ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் தொடர்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி, தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் உள்ளிடோர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 3:57 PM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆதிசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஒழுக்கம், அறம் மற்றும் கலாச்சாரத்தை மீறும் வகையிலான காட்சிகள், வசனங்கள் இருப்பின் அவற்றை திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் தணிக்கை செய்து வெளியிடும். தற்போது பல்லாயிர கோடி நபர்கள் தினமும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

ஓடிடி (OTT) தளத்தில் ஒளிபரப்பப்படும் சினிமா, வெப் தொடர்கள் ஆகியவற்றில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, ஆபாச பேச்சுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றக் காட்சிகள், பிரிவினைவாத காட்சிகள், தேசவிரோத கருத்துக்கள் போன்றவை எவ்விதமான தணிக்கையும் இன்றி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2018ம் ஆண்டில் 2.4 பில்லியன் நபர்கள் ஓடிடி தளத்தை பயன்படுத்திய நிலையில், 2027 ஆம் ஆண்டில் அது 4.2 பில்லியன் ஆக உயரும் என தரவுகள் குறிப்பிடுகின்றன. ஓடிடி தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகளால் இளம் தலைமுறையினர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இதையும் படிங்க: பரிதாபமான 'பரிதாபங்கள்' குழு... லட்டு பாவங்கள் போட்டு பகிரங்க மன்னிப்பு.. என்னதான் நடந்தது?

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை செயலர், மத்திய தொலை தொடர்பு துறை செயலர், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.