ETV Bharat / state

தேனியில் பரபரப்பு.. அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியது அ.ம.மு.க! - தேனி மாவட்ட செய்திகள்

Theni ADMK office: தேனி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சிலர் அத்துமீறு கூட்டம் நடத்தியதாக, மாவட்ட கண்காணிப்பாளரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ammk-took-over-the-theni-district-aiadmk-office
அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியது அ.ம.மு.க
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 11:08 PM IST

தேனியில் பரபரப்பு.. அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியது அ.ம.மு.க!

தேனி: வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோடாங்கிபட்டி அருகே அ.தி.மு.க கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்து. இரண்டு தளங்களுடன், சுமார் 700 பேர் அமரக்கூடிய உள்ள இந்த அலுவலகத்தைக் கடந்த 2016-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக, அமமுக என இரண்டு கட்சிகளாக உடைந்தது. இதனையடுத்து இந்த அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அலுவலகத்திற்கு உரிமையை நீதிமன்றம் சென்று யாருக்கும் சொந்தம் என்பதை நிரூபித்துக் கொள்ளுங்கள் என போலீசார் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த கூட்டமும் நடைபெறாமல் இந்த அலுவலகமானது பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்சி அலுவலகத்தில் அமமுக தெற்கு மாவட்டம் சார்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்தும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் அமமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சசிகலாவிற்கும், அமமுக கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாத நிலையில் கட்சி அலுவலகத்தில் எப்படி நடத்தலாம் என எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து அதிமுக கிழக்கு மேற்கு மாவட்ட செயலாளர்களான முருக்கோடை ராமர், ஜக்கையன் ஆகியோர் தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நடைபெற்றுவரும் நிலையில், தேனி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சிலர் அத்துமீறு நுழைந்து கூட்டம் நடத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகம் யாருக்குச் செந்தம் என்பது குறித்து ஆர்.டி.ஓ விசாரணையில் உள்ள நிலையில். அத்துமீறி நுழைந்த நபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட கண்காணிப்பாளர் மனு வழங்கியுள்ளனர். இது தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வழங்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.