ETV Bharat / state

அண்ணா பல்கலை. துணைவேந்தரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - துணை வேந்தர் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தேனி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
All india youth organization protest
author img

By

Published : Oct 22, 2020, 6:09 PM IST

தேனி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று (அக். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டியிட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாவது:

  • அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்,
  • திண்டுக்கல் முடி திருத்தும் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்,
  • மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பறிக்கக் கூடாது ஆகியவையாகும்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தேனி மாவட்டச் செயலாளர் தமிழ் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.